முக்கிய நபரிடம் கலைமாமணி விருதை பெற்று கொண்ட நடிகர் அஜித்! அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மேலும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்துடன் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது.
கலைமாமணி விருது
இந்நிலையில் அஜித் குறித்த எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம். அப்படி அவர் முதல்முறையாக கலைமாமணி விருது வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
ஆம், கடந்த 2000 ஆம் நடிகர் அஜித் தமிழக அரசு சார்ப்பில் கலைமாமணி விருதை பெற்றுள்ளார். அஜித்திற்கு அந்த விருதை கலைஞர் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களின் பட்டியல்