விஜய்யின் பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த அஜித்.. அது என்ன படம் தெரியுமா
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் வாரிசு. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நாளில் வெளிவந்த அஜித்தின் துணிவு படமும் முதல் நாளில் இருந்து சக்கபோடு போட்டு வருகிறது.

விஜய்யின் திரை வாழ்க்கையில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த படங்களில் ஒன்று கில்லி. தரணி இயக்கிய இப்படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டது.
நிராகரித்த அஜித்
ரீமேக் படமாகவே இருந்தாலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் தமிழில் வெற்றியடைந்தது.
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் இல்லையாம். நடிகர் அஜித் தான் இப்படத்தின் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.

ஆனால், இது தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதினால் சற்று யோசித்து வேண்டாம் என்று படத்தை நிராகரித்து விட்டாராம் அஜித். இதன்பின் தான் இந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றுள்ளது.
அச்சு அசல் ரீல் அம்மா நயன்தாரா போலவே மாறிய 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க