40 வயது நடிகையை வேண்டாம் என கூறிய அஜித்.. அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை ஓகே செய்துவிட்டாராம்
விடாமுயற்சி
அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விஷயங்கள் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
ஆனால், கண்டிப்பாக அடுத்த மாதம் துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், நடிகை திரிஷாவால் தற்போது இப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம்.
திரிஷா மாற்றம்
மற்ற படங்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட் காரணமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த படங்களை முடித்துவிட்டு விடாமுயற்சியில் இணைந்துகொள்கிறேன் என திரிஷா கேட்டுள்ளார்.
ஆனால், அதற்குள் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என்பதினால் திரிஷாவிற்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைக்கலாம் அஜித் கூறியுள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனியிடம் திரிஷாவிற்கு பதிலாக நடிகை தமன்னாவை இந்த ரோலில் நடிக்க வைக்கலாம் என அஜித் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
அப்படி தமன்னா இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால், வீரம் படத்திற்கு பின் அஜித் - தமன்னா இணையும் படமாக விடாமுயற்சி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் எவர்கிரீன் நடிகை யார் என்று தெரிகிறதா?..கண்டுபிடிங்க பாக்கலாம்!

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
