முதல்முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் ! AK 62 படத்தின் அப்டேட்..
அஜித்தின் கதாபாத்திரம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அப்படத்தை தொடர்ந்து அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் அவரின் 61 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் விறுவிறுப்பாக ஹைதெராபாத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது AK 62 திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அஜித் தமிழகம் முழுக்க உள்ள உணவு நிறுவனங்களை நடத்துவுபராக நடிக்கிறாராம் அஜித்.
விக்ரம் படத்தில் இது தான் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமா ! அவரே சொன்ன விஷயம்..

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
