விக்ரம் படத்தில் இது தான் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமா ! அவரே சொன்ன விஷயம்..
விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் கமலுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிறந்த நடிகர்களாக அறியபடும் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
அவர்கள் இருவரின் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.
அதில் "இதுபோன்று மனிதனின் மற்றொரு இருண்ட பக்கத்தை காட்டுவது எனக்கு பிடித்தமான ஒன்று. நான் வில்லனாக நடிப்பதை திரையில் பார்ப்பதன் மூலம் என் நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்வது போன்று உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
திரையில் காண்பிக்கப்படும் எந்த வில்லன்களின் நடிப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. மாஸ்டர் மற்றும் உபென்னா படத்தில் எனது கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இருந்திருக்காது. அதேபோல தான் விக்ரம் படத்திலும் என்னுடைய நடிப்பும் இருக்கும், ஒரு மனிதனின் மிகவும் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டியிருப்பேன்" என கூறியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி ! அருண் விஜய் மகனை வாழ்த்திய சிவகார்த்திகேயன்...