பிரபல இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் அஜித்? AK63 பற்றி கசிந்த தகவல்
அஜித்
அஜித் நடிப்பில் துணிவு படம் தற்போது தியேட்டர்களில் நல்ல வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. மேலும் அஜித் தனது அடுத்த படமான AK62 படத்தில் தான் இனி கவனம் செலுத்த போகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்காக தற்போதே கதை கேட்க தொடங்கிவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
கூட்டணி
தற்போது அஜித் ஒரு முக்கிய இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் உடன் தான் அஜித் மீண்டும் கூட்டணி சேர பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தான் இந்த அடுத்த படத்தை தயாரிக்க போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அஸீம் சொன்ன அப்பட்டமான பொய்! அவர் எம்எல்ஏ அக்கா மகன் இல்லையா?

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
