62 வது படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் இவ்வளவா?- நடிகர் கேட்டதை விட அதிகம் கொடுக்கும் தயாரிப்பாளர்
அஜித் வருட ஆரம்பத்தில் இருந்து நல்ல விஷயங்களுக்காக செய்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
வலிமை வெற்றிக்கு பின்
வலிமை படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தின் வசூல் ரூ. 200 கோடியை தாண்டிவிட்டதால் படம் வெற்றி பயணத்தை நோக்கி இருக்கிறது.
பின் அஜித் தனது மகன் பிறந்தநாளை கொண்டாட பிரபல உணவகத்திற்கு வர அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அடுத்து அஜித்தின் 62வது படம் குறித்து தகவல் வந்தது. முதன்முறையாக அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணி அமைக்கிறார்கள்.
அஜித்தின் 62வது பட சம்பளம்
நடிகரின் 62வது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தான் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க அஜித் ரூ. 100 கோடி சம்பளம் கேட்டிருந்தாராம், ஆனால் லைகா நிறுவனம் அவருக்கு ரூ. 105 கோடி சம்பளம் கொடுப்பதாக அதாவது அஜித் கேட்டதை விட 5 கோடி அதிகமாக அவர்களே கொடுக்க முன்வந்துள்ளனராம்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- ரசிகர்கள் ஷாக்