பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஏதாவது சுவாரஸ்ய புரொமோ வந்தால் உடனே மக்கள் நிகழ்ச்சி சென்று பார்த்துவிடுகிறார்கள்.
அல்டிமேட் சுவாரஸ்யங்கள்
24 மணி நேரம் நிகழ்ச்சி என்பதை தாண்டி மக்களை நிகழ்ச்சி அவ்வளவாக கவரவில்லை என்று தான் கூற வேண்டும். பழைய போட்டியாளர்கள் அவர்கள் எப்படி இருந்தால் நிகழ்ச்சிக்குள் இருக்கலாம் என பல கணக்குகளுடன் விளையாடி வருகிறார்கள்.
வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் நிகழ்ச்சியில் வந்து விளையாடுகிறார்கள்.
இதில் ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் நிகழ்ச்சியை பார்க்க மட்டும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்றே கூறலாம் காரணம் சிம்பு வருவது தான்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை சரியாக இல்லை என்பதால் சிகிச்சைக்காக அவர் வெளியேறி இருக்கிறார்.
இப்போது தானே வெளியேறிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தார் அதற்கும் அவருக்கு இப்படி ஆக வேண்டுமா என ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
மாடர்ன் உடையில் செமயாக கலக்கும் ராஜா ராணி 2 சீரியல் நாயகி ரியா- கலக்கல் புகைப்படங்கள்