அஜித் கையில் பிளேடு வைத்து கிழித்த ரசிகர்.. ஷாக்கிங் தகவல்
அஜித்
சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார் அஜித். சமீபகாலமாக பேட்டிகள் அளித்து வரும் அஜித் அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்.

இந்த நிலையில், அண்மையில் பிரபல Youtube சேனல் ஒன்றில் அஜித் அளித்த பேட்டி படு வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், கரூர் துயர சம்பவம், சினிமா, கார் ரேஸ், AK 64 அப்டேட், குடும்பம் குறித்து பல விஷயங்கள் மனம் திறந்து பேசியிருந்தார்.

ஷாக்கிங் தகவல்
அதில், ரசிகர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசினார். அப்போது 2005ஆம் ஆண்டு தனக்கு நடந்த ஷாக்கிங் தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.

"இது 2005ஆம் ஆண்டு நடந்தது. ரசிகர்கள் கூட்டத்தில் ஒருமுறை ஒருவருக்கு கைகொடுக்கும்போது பிளேடு வைத்து என் கையில் கிழிக்கப்பட்டது. காரில் ஏறிய பிறகுதான் எனக்கு கையில் ரத்தம் வருகிறது என தெரிந்தது" என கூறியுள்ளார். அஜித் கூறிய இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.