கால்பந்து விளையாட்டில் மாஸ் காட்டிய அஜித்தின் மகன் ஆத்விக்- என்ன வென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் சினிமாவை தாண்டி நிறைய விஷயங்களில் ஈடுபாடு காட்டி வருபவர் நடிகர் அஜித்.
சமையல், தோட்டம் அமைப்பது, துப்பாக்கி சுடுதல், கார் மற்றும் பைக் ரேஸ், போட்டோ கிராபி, பைக் டூர், சைக்கிளிங் என பல விஷயங்களில் ஈடுபடுத்தி ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார்.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படத்தை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் அப்படம் டிராப் ஆனது.
தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
படம் குறித்து ஏதாவது சூப்பரான செய்தி வரும் என்று பார்த்தால் இப்பட கலை இயக்குனர் மிலன் இறந்த செய்தி வந்து ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தது.
நடிகர் மகன் சாதனை
அஜித் மகன் ஆத்விக் சென்னை கால்பந்து அணியில் சேர்ந்து இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. சென்னை அணி சார்பாக ஆத்விக் விளையாடி இருக்கிறார், பதக்கமும் வென்றுள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
