மீண்டும் மாஸ் இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்.. ப்ளாக் பஸ்டர் ஆகுமா
நடிகர் அஜித்
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான விடாமுயற்சியின் படப்பிடிப்பு சில காரணங்களால் மீண்டும் மீண்டும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
ஜூன் முதல் வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூலை இறுதி வாரம் தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் மாஸ் கூட்டணி
இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் யாருடன் கைகோர்க்கவுள்ளார் என இதுவரை தகவல் வெளிவரவில்லை. ஆனால், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, விடாமுயற்சி படத்திற்கு பின் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வீரன், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் இந்த கூட்டணி அமைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் 5வது முறையாக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து கங்குவா எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு முதல் கணவருடன் பிறந்த மகனை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டாரே?