ஆவணப் படத்தில் அஜித்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது.
நடிப்பை தாண்டி நடிகர் அஜித் பைக் டூர், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். துணிவு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தான், ஐரோப்பாவிற்கு தனது நண்பர்களுடன் பைக் டூர் சென்று வந்தார்.
மீண்டும் அஜித் பைக் டூரில் உலகம் முழுவதும் சென்று வரப்போவதாக தகவல் வெளியானது. அதில் இந்தியளவில் பைக் டூர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். புனே, ஹைதராபாத், லடாக் போன்ற பகுதிகளை தாண்டி தற்போது நேபாளில் இருக்கிறார். நேபாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
ஆவணப் படத்தில் அஜித்
இந்நிலையில், தன்னுடைய பைக் டூரை ஆவணப் படமாக உருவாக்க அஜித் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவை உடன் அழைத்து சென்றுள்ளார் என்று கூட தகவல் தெரிவிக்கின்றனர். இதற்க்கு முன் சென்று வந்த பைக் டூர் ஆவணப் படம் எடிட் செய்து தயாராக உள்ளதாம்.
தன்னுடைய பைக் டூர் ஆவணப் படத்தை அஜித் வெளியிடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி அவர் வெளியிடுவதாக கூறினால் அது அவருடைய ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நடிகை பிரியா பவானி சங்கரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ