மார்க் ஆண்டனி இயக்குனருடன் கைகோர்க்கவிருக்கும் அஜித்.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்
அஜித் - விடாமுயற்சி
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அசர்பைஜானில் நடைபெறவுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா, ஹுமா குரேஷி, சஞ்சய் தத், ஆரவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். அசர்பைஜானில் 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின் சென்னையில் 10 நாட்கள் விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பல பேட்டிகளில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அஜித் சார் தான் முக்கிய காரணம் என கூறி வருகிறார்.
செம மாஸ் கூட்டணி
அவர் தான் மார்க் ஆண்டனி போன்ற படத்தை எடுக்க தன்னை ஊக்குவித்தார் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் கதை ஒன்றை கூறியுள்ளாராம்.
கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என அஜித்தும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணைய அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கூட்டணி அமைகிறதா என்று.

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
