விடாமுயற்சிக்கு முன் அஜித் - த்ரிஷா கூட்டணியில் வெளியான படங்கள்.. என்னென்ன தெரியுமா
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கூட்டணி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதோ அதே அளவிற்கு அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணி ஒரு எவர் க்ரீன் ஜோடியாக வலம் வருகிறது.
அந்த வகையில், தற்போது விடாமுயற்சி படத்திற்கு முன் அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
ஜி:
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி படத்தின் மூலம் தான் முதன் முதலாக அஜித் மற்றும் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்தனர்.
மங்காத்தா:
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படம் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று. இது அவருடைய 50வது திரைப்படமாகும்.
கிரீடம்:
நடிகர் அஜித் நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கிரீடம். இதை இயக்கியவர் ஏ. எல். விஜய், இது இவரது முதல் படமாகும். இதில் திரிஷா, ராஜ்கிரண், விவேக், சந்தானம், சரண்யா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
என்னை அறிந்தால்:
கவுதம் மேனன் இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அனுஷ்கா, திரிஷா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.