விதவிதமான புதிய லுக்கில் அஜித்.. ஆளே மாறிப்போன திரிஷா.. வெளிவந்த புகைப்படம் இதோ
குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், நட்டி உள்ளிட்டோர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்லாட் அண்ட் பேப்பர் லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
புதிய லுக்கில் அஜித் - த்ரிஷா
அதன்பின் தற்போது மற்றொரு புதிய லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே போல் கதாநாயகி த்ரிஷாவின் புகைப்படமும் இணையத்தில் வெளிவந்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் - த்ரிஷா இருவருமே மிகவும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

You May Like This Video
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu