உலகம் முழுவதும் ரூ 200 கோடியை தொட்ட வலிமை, எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு, இதோ
அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார். படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.
படத்தின் விமர்சனம்
வலிமை படம் ஆரம்பத்தில் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அஜித்தின் ஸ்டார் பவர் படத்தை காப்பாற்றியது. அதிலும் தமிழகத்தில் இப்படம் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
என்ன விமர்சனம் வந்தாலும் எங்களது நாயகன் நாங்கள் படத்தை கொண்டாடுவோம் என ரசிகர்கள் படத்திற்கு பெரிய ஆதரவு தந்து கொண்டாடி வருகிறார்கள்.
முழு வசூல் விவரம்
[
இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் தற்போது ரூ 200 கோடியை எட்டியுள்ளதாம், அதன் விவரங்கள் இதோ..
- தமிழகம்- ரூ 125 கோடி
- கேரளா- ரூ 3 கோடி
- தெலுங்கு- ரூ 6 கோடி
- கர்நாடகா- ரூ 10 கோடி
- வட இந்தியா- ரூ 4 கோடி
- வெளிநாடுகள்- ரூ 52 கோடி
விக்ரமுக்கு நடிக்க தெரியாது.. விளாசியெடுத்த நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன்