விக்ரமுக்கு நடிக்க தெரியாது.. விளாசியெடுத்த நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன்
விக்ரம்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள்களில் ஒருவர் விக்ரம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் மஹான் திரைப்படம் வெளிவந்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விக்ரம் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணுக்கும் பண்ணனும். இப்படத்தை ராஜகுமாரன் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் தான் நடித்த நடிப்பு பெரிதாக இல்லை என்று அப்போது விக்ரம், இயக்குனர் ராஜகுமாரனிடம் கூறியுள்ளார்.
விக்ரமுக்கு நடிக்க தெரியாது
இந்நிலையில், இதுகுறித்து ராஜகுமாரன் பேசுகையில், " கையை உடைத்துக்கொண்டு, தலையை திருப்பி கொண்டு நடிப்பது நடிப்பு அல்ல, மக்களுடன் கனனெக்ட் ஆவது போல் நடிப்பது தான் நடிப்பு. விக்ரம், கமல் ஹாசனை போல் அல்லது ரஜினிகாந்தை போல் தான் நடிப்பார். அவருக்கு இதைவிட்டால் வேறு மாதிரி நடிக்க தெரியாது " என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
'ராஜா ராணி 2' தொடரில் தற்போது ஆல்யாவுக்கு பதிலாக நடிக்கும் ரியா, யார் தெரியுமா?