குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார் தெரியுமா? இதோ பாருங்க
குட் பேட் அக்லி
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்னும் 2 நாட்களில் வெளிவரவுள்ளது. ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஐக்கானிக் ஜோடியான த்ரிஷா - அஜித் இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். டிரைலரில் அஜித்துக்கு அவர் விட்ட சவால் எல்லாம் வெறித்தனமாக இருந்தது.
மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சுனில் நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரோஃப் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி
இப்படத்திற்கான ப்ரோமோஷன் பேட்டிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது கலந்துகொண்டு வருகிறார்.
இதில் நமது சினிஉலகம் சேனலுக்கு அளித்த பேட்டியில், "குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார்" என தொகுப்பாளர் கேள்விகேட்க, இதற்கு பதில் அளித்த ஆதிக் ரவிச்சந்திரன் "சார் ரொம்ப ஹாப்பி, படத்தின் ஆரம்பித்தில் எனக்கு எவ்வளவு சப்போர்ட் கொடுத்தாரோ, அதே அளவுக்கு தான் இப்பவும். என்னை ரொம்ப comfortable பார்த்துக்காட்டாறு. சப்போர்ட் பன்னாரு. இயக்குநருக்கு என்னை தேவையோ, அதை செய்து கொடுங்க என தயாரிப்பாளரிடம் சொல்வார்." என கூறியுள்ளார்.
முழு பேட்டியை இங்கு பாருங்க..