விஜய் மகன் சஞ்சய் வாழ்க்கையில் அஜித் செய்த விஷயம்.. தந்தையாக விஜய் கூட இதை செய்யவில்லை
விஜய்யின் மகன்
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளார். இதற்குமுன் குறும் படங்களை இயக்கி வந்த சஞ்சய், தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது.
சஞ்சய் அறிமுக படம்
ஆனால், இதுவரை இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார்? மற்ற நடிகர்கள் யார்? என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. ஆனால், இதுவரை வெளிவந்த தகவல்களில் கவின் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கான PRO-வாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்துள்ளனர். விஜய்யின் மகன் படத்திற்கு எப்படி நாம் PRO-வாக இருப்பது என முதலில் சுரேஷ் சந்திரா தயங்கியுள்ளார். பின் அஜித்துடன் இதுகுறித்து பேசியுள்ளார். இதற்கு அஜித் 'தாராளமாக போய் பண்ணுங்க' என கூறினாராம்.
சஞ்சய் இடம் பேசிய அஜித்
அதுமட்டுமின்றி சுரேஷ் சந்திராவிடம் விஜய்யின் மகன் சஞ்சய்யின் போன் நம்பர் வாங்கி கால் செய்து பேசியுள்ளார். அப்போது, அறிமுக படத்திற்காக தனது வாழ்த்துக்களையும் சஞ்சய்யிடம் கூறினாராம் அஜித்.
சஞ்சய்யின் படம் அறிவிப்பு வெளிவந்தபின் விஜய் இதுவரை தனது சமூக வலைத்தளத்திலோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ பேசவில்லை. இதனால் சினிமாவில் தனது கெரியரை துவங்கும், தனது மகனுக்கு விஜய் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லையே என சர்ச்சை எழுந்தது.
அதன்பின் தனது மகனுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததாகவும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. ஒருவேளை அதுகுறித்து இதுவரை தகவல் வெளிவராமல் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
You May Like This Video