ஃபிலிம்ஃபேர் விருது.. சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் அஜித்.. வீடியோ இதோ
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்க அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 280+ கோடி வசூல் செய்து, அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாகியுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் - ஆதிக் கூட்டணி ஏகே 64 படத்திற்காக இணைகின்றனர். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
விருதை வென்ற அஜித்
அஜித் கடந்த பல ஆண்டுகளாக படத்தின் விளம்பரங்களிலும், விருது விழாக்களிலும் கலந்துகொள்வது இல்லை. அதை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார். ஆனால், இந்த முடிவை எடுப்பதற்கு முன் அனைவரையும் போல் பல விருது விழாக்களில் பங்கேற்றுள்ளார்.
அப்படி பல ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் நடிகர் அஜித்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. வில்லன் படத்திற்காக இந்த விருதை அஜித் வாங்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
