ஜனநாயகன் பாடலுக்கு விஜய் போல் நடனமாடிய மலையாள முன்னணி நடிகர்.. வீடியோ இதோ
ஜனநாயகன்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால், வழக்கத்தை விட பல மடங்கு எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது உள்ளது. வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தளபதி கச்சேரி
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதை நாம் அறிவோம். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தளபதி கச்சேரி பாடலுக்கு Youtube-ல் இதுவரை 85 மில்லியன் விவ்யுஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் பிரபலமாகியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் விஜய் போலவே நடனமாடி வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதுவும் சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடிய பின் ரீல்ஸ் இன்னும் சமூக வலைத்தளத்தில் அதிகமாகிவிட்டது.
அஜூ வர்கீஸ்
இந்த நிலையில், மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜூ வர்கீஸ் தளபதி கச்சேரி பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ பாருங்க..
Malayalam actor #AjuVarghese grooves to Thalapathy Vijay’s #ThalapathyKatcheri 🕺🏽🕺🏽 pic.twitter.com/lHEwEPv3QE
— Actor Vijay Team (@ActorVijayTeam) December 30, 2025