அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளார்களே
அஜித் 62
ஏகே 62 படத்தின் அறிவிப்பிற்காக தான் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்கும் முதல் திரைப்படமும் இதுவே ஆகும்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போகிறவர் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
வில்லனாகும் பிரபல நடிகர்
அருண் விஜய் மற்றும் அருள்நிதி இப்படத்தில் வில்லன்களாக நடிக்கப்போகிறார்கள் என கூறப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் இப்படத்தில் நடிக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
மேலும் இவர் வில்லனாக நடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது . ஆர்யா மற்றும் அஜித் இருவரும் இணைந்து ஏற்கனவே ஆரம்பம் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி கண்ணம்மா 2ல் முக்கிய நடிகை மாற்றம்! ஒரே மாதத்திற்குள் இப்படியா

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
