AK64 பிப்ரவரியில் ஷூட்டிங், படம் எப்படி இருக்கும்.. ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்
நடிகர் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் AK 64. அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு வருவதால், அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கிறது.
இந்நிலையில் அஜித்தின் மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகி இருப்பதால் அதை பார்க்க ஆதிக் ரவிச்சந்திரன் இன்று சென்னை கமலா தியேட்டருக்கு வந்து இருந்தார். அப்போது AK 64 படம் பற்றிய அப்டேட்டையும் கொடுத்தார்.

அடுத்த மாதம் ஷூட்டிங்
"பிப்ரவரியில் ஷூட்டிங் போகிறோம். படத்தில் நிறைய surprises இருக்கு. ஒவ்வொன்றாக போகப்போக சொல்கிறோம்."
"குட் பேட் அக்லீ படம் ரசிகர்களாக செய்தது. இந்த படம் குடும்ப ரசிகர்கள், குழந்தைகள் என எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் entertaining படமாக இருக்கும்" என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
