வலிமையை தொடர்ந்து AK61 படத்திலுமா இப்படி ? இணையத்தில் கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
AK61 படத்தின் ஷுட்டிங்
வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற அஜித் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அஜித்துடன் சமுத்திரகனி, மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் வங்கி கொள்ளை குறித்து உருவாகும் திரைப்படம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றின் ஷூட்டிங் நடைப்பெற்றுள்ளது. இதனை கண்ட மக்கள் சுற்றி நின்று அதனை வீடியோ எடுத்துள்ளனர்.
ஏற்கனவே வலிமை திரைப்படத்திலும் இதேபோல் ஹைவே ரோட்டில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி தான் பெரியளவில் பேசப்பட்டது. மேலும் இப்படத்திலும் அதேபோல காட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#AK61 Shooting Some Stunt Sequence ?
— AJITHKUMAR ARMY ™? (@AjithKumarArmy_) July 20, 2022
#Ajithkumar pic.twitter.com/nXqCGLXafm
லோகேஷ் கனகராஜ் செய்த டீவிட் ! தளபதி விஜய் ரசிகர்களுக்காக முக்கிய இயக்குநர் பதிவிட்ட விஷயம்..