லோகேஷ் கனகராஜ் செய்த டீவிட் ! தளபதி விஜய் ரசிகர்களுக்காக முக்கிய இயக்குநர் பதிவிட்ட விஷயம்..
இயக்குநர் லோகேஷ் டீவிட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வருபவர், இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் மிக பெரிய வெற்றியடைந்துள்ளன.
அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் வரலாறு காணாத வசூலை குவித்தது.
அப்படத்தை தொடர்ந்து லோகேஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி ஏற்கனவே தளபதி 67 திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் சமீபத்தில் சல்மான் கானின் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் தகலல் பரவின.
இந்நிலையில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் குலுகுலு, அப்படத்தின் பாடல் நேற்று வெளியாகியிருந்தது. அதனை ரீ-டீவிட் செய்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டு இருந்தார்.
அதற்கு இயக்குநர் ரத்னகுமார் சிங்கம் படத்தின் டானி புகைப்படத்தை பதிவிட்டு, “Meanwhile Thalapathy fans” விஜய் ரசிகர்களின் மனநிலை என கேப்ஷன் போட்டுள்ளார்.
Meanwhile Thalapathy fans ? https://t.co/32RtuOeJot pic.twitter.com/t37gnwmdbw
— Rathna kumar (@MrRathna) July 20, 2022
தொகுப்பாளினி அஞ்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு- ரோட்டில் நின்று கதறி கதறி அழும் பிரபலம்