AK 61 படத்தில் இணைந்த, அஜித்திற்கு பெயரை பெற்றுத்தந்த முக்கிய நடிகர் ! யார் தெரியுமா?
AK 61 படத்தில் இணைந்த முக்கிய நடிகர்
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி AK 61 படத்திற்காக இணைந்துள்ளது.
விறுவிறுப்பாக ஹைதெராபாத்தில் நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அவ்வப்போது நடிகர் அஜித்தின் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.
இதனிடையே தொடர்ந்து AK 61 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றனர், அப்படி மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தில் மகாநதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அஜித்திற்கு 'தல' என பெயரை கொடுத்த ஷங்கர் 20 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா