நடிகர் அஜித் கலந்து கொள்ளாத AK61 படத்தின் ஷூட்டிங் ! இணையத்தில் கசிந்த புகைப்படம்..

By Jeeva Jul 09, 2022 11:20 AM GMT
Report

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் அஜித் கலந்து கொள்ளாத AK61 படத்தின் ஷூட்டிங் ! இணையத்தில் கசிந்த புகைப்படம்.. | Ak61 Shooting Going Full Swing

இந்நிலையில் AK61 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்து அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

மேலும் தற்போது நடிகர் அஜித் கலந்து கொள்ளாமல் AK61 படத்தின் ஷூட்டிங்  வடசென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இயக்குநர் எச்.வினோத் மற்றும் நீரவ் ஷா உள்ளிட்டோர் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

நடிகர் அஜித் கலந்து கொள்ளாத AK61 படத்தின் ஷூட்டிங் ! இணையத்தில் கசிந்த புகைப்படம்.. | Ak61 Shooting Going Full Swing

பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் வீடியோ.. இன்று படுவைரல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US