நடிகர் அஜித் திடீர் பைக் ரைட்டின் பின்னணி ! AK61 பட ரிலீஸ் குறித்து வெளியான உறுதியான தகவல்..

By Jeeva Jun 18, 2022 06:50 AM GMT
Report

AK61 

தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த வரும் இன்று திடீரென நடிகர் அஜித் பைக் ரைட்டிற்காக கிளம்பியுள்ள புகைப்படங்கள் வெளியாகின. இந்த முறை அவர் UK, Europe உள்ளிட்ட இடங்களுக்கு பைக் ரைட் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இதனிடையே தற்போது அவர் நடித்து வந்த AK61 படத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி நடிகர் அஜித் அப்படத்தில் தனது 90% ஷூட்டிங்கை முடித்து விட்டராம்.

மேலும் தற்போது மற்ற நடிகர்களின் படபிடிப்பு நடந்து வருகிறதாம், இன்னும் அஜித்தின் சில காட்சிகளே படமாக்கப்பட இருக்கிறதாம். விரைவில் இப்படத்தின் டப்பிங் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி இப்படம் உறுதியாக தீபாவளியில் வெளியாகும் என்றும் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வந்துள்ளன.  

நடிகர் அஜித் திடீர் பைக் ரைட்டின் பின்னணி ! AK61 பட ரிலீஸ் குறித்து வெளியான உறுதியான தகவல்.. | Ak61 Shooting Latest Updates

நேற்று நடந்த விக்ரம் சக்சஸ் மீட்டில் பரிமாறப்பட்ட 40 வகையான உணவு ! பந்தியிலே அரம்பித்து பந்தியிலே முடிந்தது...

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US