AK61 படத்தின் டைட்டில் இது தானா ! இப்போதே இணையத்தில் வெளிவந்த தகவல்
AK61 டைட்டில்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வங்கி கொள்ளை குறித்த திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில் AK61 குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆம், அதன்படி AK61 படத்தின் டைட்டில் வல்லமை என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை போலவே இப்படத்தின் டைட்டில் உள்ளது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் அஜித்தே தொலைப்பேசியில் அழைத்து தனது திரைப்படத்தை இயக்கும்படி கேட்ட இயக்குநர்