AK62 திரைப்படம் தொடங்கும் முன்பே இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் நடிகர் அஜித் சொன்ன விஷயம் ! என்ன தெரியுமா
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61 -வது திரைப்படமான உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படம் ஒரு வங்கி கொள்ளை குறித்த திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அப்படத்தின் அறிவிப்பு பல நாட்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது.
விக்னேஷ் சிவன்
இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் “நாம் செய்யும் வேலையை எப்போதும் கொண்டாட வேண்டும். ஒரு வேலையை செய்யும் அனைவருமே அந்த வேலையை உற்சாகமாக செய்தால் அந்த வேலை நிச்சயமாக வெற்றி பெறும்”.
ஒரு படமாக இருந்தாலும் சரி, அதில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் கூட அது தனது படம் என உற்சாகமாக செய்தால், அப்படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என அஜித் சொன்னதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
