Breaking : வெளியானது AK 62 அப்டேட் ! - முக்கிய இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் அஜித்..
அஜித்தின் வலிமை
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
மேலும் இப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அதிகமாகவே செய்துள்ளது என கூறப்படுகிறது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் AK61 படத்திற்காக மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் முதல் வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது.
AK62 அப்டேட்
இதற்கிடையே தற்போது AK62 படத்தின் அப்டேட் பரபரப்பாக இணையத்தில் பரவி வருகிறது. ஆம் அடுத்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.
லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நஷ்டம் மட்டும் 100 கோடிக்கு மேல் ! படு தோல்வி அடைந்த பிரபாஸின் ராதே ஷ்யாம்..
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri