அஜித்தின் AK 64 தயாரிப்பாளர் இவரா? யார் பாருங்க
அஜித் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் அவரது அடுத்த படமான AK 64 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.
பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்கும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா விதமான் ஆடியன்ஸையும் கவரும் வகையில் இந்த படம் இருக்கும் எனவும் அவர் கூறி இருந்தார்.

தயாரிப்பாளர்
இந்நிலையில் AK 64 படத்தின் தயாரிப்பாளர் யார் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் Anil Sunkara தான் இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறாராம்.
இதற்கு முன் அவர் மகேஷ் பாபுவின் Nenokkadine மற்றும் Sarileru Neekevaru உள்ளிட்ட பல தெலுங்கு படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.