பிரம்மாண்ட இயக்குனரை சந்தித்த அல்லு அர்ஜுன்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
புஷ்பா பட வெற்றியால் நடகர் அல்லு அர்ஜுன் தான் தற்போது இந்திய சினிமாவில் பெரிய ட்ரெண்ட்.
புஷ்பா வெற்றி
வழக்கமாக தெலுங்கு படங்கள் ஹிந்தி மொழியில் வெளியானாலும் சுமாரான ரெஸ்பான்ஸ் தான் இருக்கும். ஆனால் புஷ்பா படம் ஹிந்தியில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.
சினிமா நட்சத்திரங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை புஷ்பா அல்லு அர்ஜுன் போல செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின.
இது ஒருபுறம் இருக்க பல முக்கிய பாலிவுட் ஹீரோயின்கள் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க ஆசை தெரிவித்தனர்.
சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்த அல்லு அர்ஜுன்
இந்நிலையில் அல்லு அர்ஜுன் நேற்று மும்பைக்கு சென்று பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்போன இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்து பேசி இருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இதற்குமுன் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற வரலாற்று படங்கள் இயக்கியவர். அவருடன் அல்லு அர்ஜுன் கூட்டணி சேர்ந்தால் படம் எப்படி இருக்கும் என தற்போதே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டனர்.
கோபி சிக்குவாரா? பாக்கியலட்சுமி சீரியலில் இன்று வரும் பெரிய ட்விஸ்ட்