ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக வீடு கட்டும் அல்லு அர்ஜுன்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?
அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக, ரசிகர்களால் பான் இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1625 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ள நிலையில், எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வீடு
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் உள்ள பணக்கார நடிகர்களில் ஒருவர் ஆவார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 460 கோடி ஆகும்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் 4,000 சதுர அடியில் பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்றை அல்லு அர்ஜுன் கட்டி வருகிறாராம். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 80 கோடி முதல் ரூ. 100 கோடி வரை இருக்கும் என்கின்றனர். ஹைதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸில் நடிகர் சிரஞ்சீவியின் வீட்டிற்கு அருகே, இந்த புதிய வீட்டை அல்லு அர்ஜுன் கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.