8 வருடமாக அஜித்தை பார்க்க முயற்சி செய்யும் பிரபல இயக்குனர்!
அல்போன்ஸ் புத்ரன்
நேரம், ப்ரேமம் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். அவர் அதற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கோல்ட் என்ற படத்தை கடந்த வருடம் இயக்கி இருந்தார்.
பிரித்விராஜ், நயன்தாரா நடித்து இருந்த அந்த படத்திற்கு சுமாரான விமர்சனம் மட்டுமே கிடைத்தது.
அஜித்தை சந்திக்க முயற்சி
இந்நிலையில் தற்போது அல்போன்ஸ் புத்ரன் தான் அஜித்தை சந்திக்க கடந்த 8 வருடமாக முயற்சித்து வருவதாக கூறி இருக்கிறார்.
"அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பத்து முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். வயசாகுறதுக்குள்ள பாக்க முடிஞ்சா நான் நல்ல படம் பண்றேன். நான் அஜித்தை வைத்து படம் எடுத்தால் அது 100 நாள் ஓடும். ஹாலிவுட் தியேட்டரில் கூட ஓடும். "
"சூப்பர்ஸ்டார், உலகநாயகன், தளபதி ஆகியோருக்கும் அதே போல தான். அதற்க்கு என்னை முழு சுதந்திரத்தோடு படம் எடுக்க விட வேண்டும்" என அல்போன்ஸ் புத்திரன் கூறி இருக்கிறார்.
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்