ரஜினி, கமலை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால்.. ப்ரேமம் இயக்குனரின் ஆசை

By Parthiban.A May 26, 2022 11:40 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து படங்கள் நடித்து வருகின்றனர். ரஜினி அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் ப்ரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ரஜினி மற்றும் கமல் உடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

ரஜினி, கமலை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால்.. ப்ரேமம் இயக்குனரின் ஆசை | Alphonse Puthren About Rajinikanth And Kamal

"நான் ரஜினி அல்லது கமலை நேரில் சந்தித்தால், அவர்கள் இருவருமே எனது ஸ்கிரிப்ட் மீது ஆர்வம் காட்ட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இருவருக்குமே என்னிடம் ஸ்கிரிப்ட் இருக்கிறது. எனக்கு தற்போதைக்கு லக் இல்லை என தோன்றுகிறது."

"அவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. வருங்காலத்தில் நான் அவர்களை சந்திக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தால், அவர்களுக்கு எனது ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால்.. நான் எனது திறமை மொத்தத்தையும் பயன்படுத்தி நல்ல பத்ம கொடுப்பேன். அவர்களை தனித்தனியாக முதலில் இயக்குவேன், பின்னர் ஒன்றாக ஒரு படம் இயக்குவேன்" என அல்போன்ஸ் புத்ரன் கூறி உள்ளார்.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US