கமல் ஹாசனுக்கு ப்ரேமம் இயக்குனர் வைத்த கோரிக்கை
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பை வியந்து பாராட்டும் பிரபலங்கள் பலர் உண்டு. தற்போது ப்ரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கமல்ஹாசன் நடிப்பை சிறப்பிக்கும் வகையில் ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்.
அல்போன்ஸ் புத்ரன்
நேரம், ப்ரேமம் படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் அல்போன்ஸ் புத்ரன். அதற்கு பிறகு அவர் கோல்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ரஜினி, கமலை வைத்து படம் இயக்க ஆசை என அவர் சில மாதங்களுக்கு முன்பு பேசி இருந்தார். மேலும் ரஜினியை வைத்து படம் இயக்கினால் கண்டிப்பாக அது 1000 கோடி வசூலிக்கும் எனவும் கூறினார் அவர்.
கமலுக்கு கோரிக்கை
இந்நிலையில் தற்போது அவர் கமலுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார். கமல் நடிப்புக்கான பிலிம் ஸ்கூல் தொடங்க வேண்டும் என்றும், மற்ற சினிமா நட்சத்திரங்கள் அதில் வந்து பாடம் எடுக்கலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
