ஆல்யா மானசா - சஞ்சீவ் விவாகரத்தா? சண்டை உண்மையா.. வைரல் வீடியோ
நடிகை ஆல்யா மானசா சின்னத்திரையில் டாப் நடிகைகளில் ஒருவர். அவர் விஜய் டிவியின் ராஜா ராணி மூலமாக பாப்புலர் ஆன நிலையில் அதே தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். ஆல்யா தற்போது சன் டிவியின் இனியா தொடரில் நடித்து வருகிறார். கணவர் சஞ்சீவ் அதே டிவியில் கயல் சீரியல் ஹீரோ.
எங்களுக்கு விவகாரத்தா?
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் தற்போது சண்டை போட்டு பிரிந்துவிட்டார்கள் என்றும் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என்றும் சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தற்போது இருவரும் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் சண்டை போடுவது போல காட்டி, இப்படி தான் எங்களை பற்றி எழுதுகிறார்கள் எனவும், "டைவர்ஸா?? எங்களுக்கா?? NEVER" என கூறி இருக்கின்றனர்.
இதன் மூலமாக விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
