இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு நடிகை ஆல்யா மானசா செய்த முதல் விஷயம்- புகைப்படங்களுடன் இதோ
றடிகை ஆல்யா மானசா சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். அப்போது அவர் அவ்வளவு பிரபலம் அடையவில்லை, பின் விஜய்யில் ராஜா ராணி தொடரில் நடித்தார்.
அதில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்தார்கள்.
சஞ்சீவ்-ஆல்யா காதல் திருமணம்
இருவரும் காதலித்தாலும் ஆல்யாவின் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் காதலரை கரம் பிடிக்க வேண்டும் என ஆல்யா வீட்டில் சம்மதம் இல்லாமல் திருமணத்தை முடித்தார்.
சஞசீவ்-ஆல்யா இருவரும் திருமணம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு 2020ம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறக்க 2022ல் அர்ஷ் என்ற மகன் பிறந்துள்ளார்.
அண்மையில் தான் அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது, அந்த புகைப்படங்களை சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.
பிரசவத்திற்கு பின் ஆல்யா மானசா
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா மானசா பிரசவத்திற்கு பின் வரவில்லை, சஞ்சீவ் தான் அவரது பக்கத்தில் பதிவுகள் போட்டு வந்தார்.
பின் ஆல்யா மானசா சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் பேசியுள்ளார். அதில் ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஷகீலாவின் மகள் மிலா- வைரல் போட்டோ ஷுட், ஆனால்?