கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஷகீலாவின் மகள் மிலா- வைரல் போட்டோ ஷுட், ஆனால்?
நடிகை ஷகீலா சில வருடங்களுக்கு முன்பு வரை இவரது பெயரை சொன்னாலே சில விஷயங்கள் தான் நியாபகம் வரும். ஆனால் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் அவரது பெயர் முற்றிலுமாக நல்ல விதத்தில் மாறியுள்ளது.
ஷகீலா பற்றிய விஷயங்கள்
அந்நிகழ்ச்சி மூலம் தான் ஷகீலா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அனைவருக்கும தெரிய வந்தது. அதேபோல் அவர் மிலா என்ற திருநங்கையை தத்தெடுத்து தனது மகளாக வளர்த்து வருவதும் தெரிய வந்தது.
மிலா பேஷன் டிசைனிங் படித்துள்ளார், அவர் தமிழில் ஒரு சீரியல் கூட திருநங்கையாக மாறுவதற்கு முன் நடித்திருக்கிறார்.
கர்ப்பகால போட்டோ ஷுட்
ஷகீலா மற்றும் மிலா இருவரும் இதுவரை நிறைய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்கள். இந்த நேரத்தில் தான் மிலா கர்ப்பமாக இருப்பது போல் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் அவர் என்னால் குழந்தை பெற முடியாது என்றாலும் இந்த போட்டோ ஷுட் எனது கனவை நினைவாக்கிவிட்டது என பதிவு செய்துள்ளார்.
குவைத்தை தொடர்ந்து இன்னொரு முக்கிய இடத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடையா?- ரசிகர்கள் ஷாக்