ஆல்யா மானசா கம்பேக்: வெறித்தனமான பாக்சிங் வீடியோ வெளியிட்ட கணவர்
ஆல்யா மானசா
விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலமாக பிரபலம் ஆன நடிகை ஆல்யா மானசா அதே தொடரின் ஹீரோ சஞ்சீவை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் முதல் குழந்தை பிறந்த பிறகு ராஜா ராணி 2 தொடரில் நடிக்க தொடங்கினார்.
ஆனால் மீண்டும் கர்பமானதால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். தற்போது இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கும் ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ரீஎன்ட்ரிக்கு தயாராகி வருகிறார் ஆல்யா மானசா.

பாக்சிங்
இந்த முறை அவர் சன் டிவியின் புது சீரியலில் தான் நடிக்க போகிறார். அவர் அதற்காக தற்போது வெறித்தனமாக பாக்சிங் ட்ரெயினிங் எடுத்து வருகிறார்.
அதன் வீடியோவை ஆல்யா மானசா கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதோ..
குஷ்பு மகளா இது? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! போட்டோ இதோ