சர்ப்ரைஸாக தனது கணவர் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஆல்யா மானசா.. என்ட்ரி கொடுத்த நடிகை, வீடியோ
ஆல்யா மானசா-சஞ்சீவ்
நட்சத்திர ஜோடிகள் எப்போதுமே ரசிகர்களால் ஸ்பெஷலாக பார்க்கப்படுவார்கள். அப்படி சின்னத்திரையில் ஒரு சீரியல் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து 2 குழந்தைகள் பெற்றவர்கள் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்.
இவர்கள் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றையும் கட்டினார்கள். அவர்கள் வீட்டின் Home Tour வீடியோ நமது யூடியூப் பக்கத்தில் கூட பகிர்ந்தோம்.
சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய நாயகனாக நடித்து வருகிறார். அண்மையில் சன் டிவியில் இனியா தொடர் முடிவுக்கு வர தற்போது ஆல்யா மானசா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் இந்த புதிய தொடரின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.
பிறந்தநாள்
செம பிஸியாக வேலை செய்துவரும் சஞ்சீவ்-ஆல்யா மானசா வீட்டில் ஸ்பெஷல் கொண்டாட்டம் நடந்துள்ளது.
அதாவது தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சஞ்சீவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கயல் சீரியல் நடிகை சைத்ராவும் சர்ப்ரைஸாக கலந்துகொண்டிருக்கிறார்.
இதோ ஆல்யா மானசாவே வெளியிட்ட பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ,