ஆல்யா மானசா நடிக்கும் இனியா சீரியல் நாயகன் யார் தெரியுமா?- நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வரும் பிரபலம்
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் டாப் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஆல்யா மானசா.
இவர் இதுவரை ராஜா ராணி என்ற சீரியலில் மட்டுமே முழுவதும் நடித்துள்ளார், இரண்டாவதாக ராஜா ராணி 2 தொடரில் கமிட்டாகி நடித்துவந்த அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து முழுவதும் விலகினார்.
நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்த அவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இனியா தொடர்
இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ஆல்யா மானசா. வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் நாயகனாக கயல் சீரியலில் நடித்துவரும் சஞ்சீவ் நடிக்க இருப்பதாக இடையில் வைரலாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இப்போது என்ன தகவல் வந்துள்ளது என்றால் இனியா தொடரில் நாயகனாக நடிக்க நடிகர் ரிஷி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நடிக்க வருவதால் ரசிகர்கள் தொடரை காண ஆவலாக உள்ளனர்.
ரோஜா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவி ஹிட் சீரியல்- சோகத்தில் ரசிகர்கள்