ரசிகர்களை குழப்பும் சன் டிவி.. ஆல்யா மானசாவின் இனியா சீரியல் ஆரம்பத்திலேயே மாற்றமா
சன் டிவி சீரியல்கள் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. கயல் சீரியல் தான் தற்போது நம்பர் ஒன் ஆக இருக்கிறது.
ரோஜா கிளைமாக்ஸ்
மேலும் முன்னணி தொடராக இருந்துவரும் ரோஜா சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைகிறது. கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை அடைந்திருப்பது அதன் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இருப்பினும் மற்றொரு தரப்பினர் ரோஜா சீரியல் முடிவது நல்ல விஷயம் தான் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இனியா சீரியல்
ரோஜா சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வரும் 9 மணிக்கு சன் டிவி புது சீரியலான 'இனியா' வர இருப்பதாக அறிவித்தது. டிசம்பர் 3ம் தேதி ரோஜா சீரியல் முடிகிறது, அதன் பின் டிசம்பர் 5ம் தேதியில் இருந்து இரவு 9 மணிக்கு ஆல்யா மானசா நடிக்கும் இனியா தொடர் வர இருக்கிறது என சில தினங்கள் முன்பு சன் டிவி ப்ரோமோ வெளியிட்டது. விஜய் டிவி ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி இந்த தொடரில் இணைகின்றனர்.
ஆனால் தற்போது அந்த ப்ரோமோ திடீரென youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. தற்போது புது ப்ரொமோ வீடியோ ஒன்றை சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் இனியா சீரியல் 'விரைவில்' என மட்டும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அதனால் தற்போது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இனி 9 மணிக்கு எந்த சீரியல் தான் வர போகிறது என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
2022ல் அதிகம் வசூலித்த டாப் 4 படங்கள்! பிரபல விநியோகஸ்தர் சொன்ன லிஸ்ட்