பிரபல நடிகை ஆல்யா மானசாவின் புதிய சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியது.. போட்டோஸ் இதோ
ஆல்யா மானசா
நடிகை ஆல்யா மானசா, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம்.
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி மூலம் களமிறங்கிய ஆல்யா மானசாவிற்கு விஜய் டிவியில் வரப்பிரசாதமாக அமைந்தது ராஜா ராணி சீரியல். அதில் சஞ்சீவுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார், பின் அப்படியே ராஜா ராணி 2 தொடரில் நடித்தார்.
அந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேறியவர் சன் பக்கம் வந்து இனியா என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைய ஆல்யா மானசா அடுத்த தொடர் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருந்தார்.
பூஜை போட்டோஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஆல்யா மானசா தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக கமிட்டாகியுள்ள புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்டார்.
ஜீ தமிழில் புதிய சீரியல் கமிட்டானார் என்பதை மட்டும் அறிவித்தார், அதன்பின் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் தொடங்கியுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆல்யா மானசாவே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
