ஆல்யா மானசா நடிக்கும் பாரிஜாதம் சீரியல் எப்போது ஆரம்பம்... வெளிவந்த விவரம்
ஆல்யா மானசா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆல்யா மானசா.
அந்த தொடருக்கு ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் பின் சன் டிவி பக்கம் சென்று இனியா என்ற சீரியலில் நாயகியாக நடித்தார்.
சீரியலில் நடிப்பதை தாண்டி தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, சொந்த யூடியூப் பக்கம் வேலை, விளம்பரம் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.
பாரிஜாதம்
இந்த நிலையில் தான் நடிகை ஆல்யா மானசா ஜீ தமிழில் கமிட்டாகியுள்ள புதிய சீரியல் குறித்த தகவல் வந்தது.
அதாவது பாரிஜாதம் என்ற சீரியலில் தான் ஆல்யா மானசா நடிக்கிறார், காது கேட்காத நபராக நடிக்கிறார்.
ஏற்கெனவே சீரியலின் 2 புரொமோக்கள் வெளியான நிலையில் இந்த சீரியல் வரும் செப்டம்பர் 8 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
