இரண்டாவது மகன் பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை ஆல்யா மானசா- எந்த தொடர் தெரியுமா?
நடிகை ஆல்யா மானசா தமிழ் சின்னத்திரையில் கலக்கிவரும் ஒரு நடிகை. ராஜா ராணி என்ற தொடர் மூலம் புதியவராக அறிமுகமான இவர் அந்த தொடர் கிடைத்து வரவேற்பு இப்போது முன்னணி நாயகிக்கு இணையாக வளர்ந்துள்ளார்.
சஞ்சீவை திருமணம் செய்துகொண்ட ஆல்யாவிற்கு ஐலா என்ற மகள் உள்ளார். அதோடு கடந்த மாதம் தான் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என பெயரிட்டுள்ளனர்.
குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை தொடரில் நடித்து வந்த ஆல்யா பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 தொடரில் சந்தியாவாக வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் இனி சந்தியாவாக நடிக்க போவதில்லை என கூறினார்.
ஆல்யாவின் புதிய திட்டம்
நடிகை ஆல்யா தற்போது தனது இரண்டாவது மகனை பார்த்துக் கொள்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவரது மகனின் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகின.
தற்போது நடிகை ஆல்யா மானசா நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் அடுத்து எப்போது சீரியலில் நடிக்க வருவீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் இன்னும் சில மாதங்களில் சீரியலில் நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார்.
ஆர்யாவின் புதிய சீரியல்
நடிகை ஆல்யா மானசா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் காவ்யாவிற்கு பதிலாக நடிக்க வருவதாக ஒரு வதந்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.