ஆல்யா மானசா - சஞ்சீவ் கார் Collection.. இவர்களிடம் இத்தனை கார்கள் உள்ளதா
சஞ்சீவ் - ஆல்யா மானசா
சின்னத்திரையின் நட்சத்திர ஜோடி சஞ்சீவ் - ஆல்யா மானசா. ராஜா சீரியலில் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் பெயர் ஐலா சையத் மற்றும் மகன் பெயர் அர்ஷ் சையத்.
சஞ்சீவ் தற்போது கயல் சீரியலில் கதாநாயகனாக பிசியாக நடித்து வருகிறார். ஆல்யா மானசா இனியா சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் ஆல்யா மானசா நடித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் இவர்கள் தொடர்ந்து பல கார்களை வாங்கி வருவதை, சமீபகாலாமாக பார்க்க முடிகிறது. சஞ்சீவ் - ஆல்யா மானசா இருவருமே கார் பிரியர்களாம். இந்த நிலையில், இவர்களிடம் என்னென்ன கார்கள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார் Collection
சஞ்சீவ் - ஆல்யா மானசா இருவரும் முதன் முதலில் ஆல்டோ கார்தான் வைத்திருந்தார்களாம். திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் வெளியே செல்ல ஒரு பெரிய கார் வேண்டும் என்பதால், கியா கேரன்ஸ் என்கிற காரை வாங்கியுள்ளனர்.
ஆல்யா மானசா குழந்தை பெற்ற பின் உடல் எடை கூடிவிட்டதால், அதன்பின் 6 மாதத்தில் உடல் எடையை குறைத்து காட்டினாராம். அதனால் அவருடைய பிறந்தநாள் பரிசாக மினி கூப்பர் எனும் சொகுசு கார் ஒன்றை வாங்கி தந்துள்ளார் சஞ்சீவ். அதே போல் சஞ்சீவின் பிறந்தநாள் அன்று, மஹிந்திரா தார் காரை பரிசாகஆல்யா மானசா வாங்கி கொடுத்திருக்கிறார்.
இவை தவிர இவர்களிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் எனும் ஆடம்பர கார் ஒன்று உள்ளது. இந்த கார் வாங்க வேண்டும் என்பது, சஞ்சீவ் - ஆல்யா மானசாவின் கனவாக இருந்ததாம். அதுவும் கடந்த ஆண்டு நிறைவேறியுள்ளது.
இந்த காரை வாங்குவதற்காக, தங்களிடம் இருந்த மினி கூப்பர் மற்றும் மஹிந்திரா தார் ஆகிய கார்களை விற்றுத்தான் பென்ஸ் காரை வாங்கியுள்ளார்களாம். இந்த காரின் மதிப்பு ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி இருக்கும் என்கின்றனர்.