சீரியலில் நடிப்பதை தாண்டி சொந்தமாக புதிய தொழிலில் இறங்கிய ஆல்யா மானசா... வெளிவந்த முதல் வீடியோ
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையின் டாப் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.
மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவருக்கு அடுத்தடுத்து வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் தான்.

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் புதுமுக நாயகியாக நடிக்க தொடங்கி ராஜா ராணி 2, இனியா இப்போது ஜீ தமிழில் பாரிஜாதம் தொடரில் நடித்து வருகிறார்.
சீரியல்களில் நடிப்பதை தாண்டி ஜீ தமிழில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். நிறைய விருது விழாக்கள், போட்டோ ஷுட், தனியார் நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார்.

புதிய தொழில்
ஆல்யா மானசா சொந்தமாக யூடியூப் பக்கம் தொடங்கி தனது அன்றாட வாழ்க்கையின் விஷயங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளார்.

அதாவது Whats Cooking என்ற பெயரில் ஒரு புதிய ஷோவை தனது யூடியூப் பக்கத்திற்கான தொகுத்து வழங்க உள்ளாராம். அதற்கான Home Tour வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார், இதோ அந்த வீடியோ,