அச்சச்சோ இவ்வளவு பெரிய தழும்பா- சீரியல் நடிகை ஆல்யா மானசா போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
ஆல்யா மானசா
நடிகை ஆல்யா மானசா இவருக்கு என்று ஒரு அறிமுகமும் தேவையே இல்லை, இவர் யார் எப்படி சின்னத்திரை வந்தார், என்னென்ன சீரியல்கள் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ராஜா ராணி தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகன் மற்றும் மகள் பெற்றுள்ளார்.
குழந்தை பெற்ற பிறகு குண்டாக ஆன ஆல்யா மானசா அதே வேகத்தில் உடல் எடையையும் குறைத்துள்ளார்.
இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், சீரியலும் TRP டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் நடந்த சன் டிவி குடும்ப விருதுகள் விழாவில் சிறந்த நாயகிக்கான விருதையும் பெற்றார்.
வைரல் போட்டோ
இவர் சன் தொலைக்காட்சியில் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் கபடி விளையாடி இருந்தார். அப்போது அவருக்கு காலில் எழும்புமுறிவு ஏற்பட ஆபரேஷனும் நடந்தது.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் காலில் போடப்பட்ட தையல் தழும்பு தெரிந்துள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் காலில் இவ்வளவு பெரிய காயமா என ஷாக் ஆகியுள்ளனர்.